ரூ.4 லட்சம் மின்திருட்டு கண்டுபிடிப்பு

ரூ.4 லட்சம் மின்திருட்டு கண்டுபிடிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பறக்கும் படையினர் நடத்திய திடீர் சோதனையின்போது வியாசர்பாடி துணை மின்வட்டாரத்துக்கு உட்பட்ட ஒரு பிளாஸ்டிக் நிறுவனம் தொழில்துறையினருக்கான குறைந்த அழுத்த மின்சாரத்தில் சீல் டேம்பரிங் முறையில் மின்திருட்டு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நிறுவனத்திடம் மின் இழப்புக்கான கட்டணம் கணக்கிடப்பட்டு ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 775 வசூல் செய்யப்பட்டது. மின் திருட்டுக்கான குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுவதற்கு பதிலாக ரூ.40 ஆயிரம் அபராதத்தையும் அந்த நிறுவனம் செலுத்தியது. சென்னையில் மின்திருட்டு பற்றிய தகவலை 9444018955, 9445850452,9445850453 எனும் எண்களில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in