

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தின் 2வது அலகில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது.
2வது அலகில் நிலக்கரி பற்றாக்குறையால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. ஒடிசாவில் இருந்து நிலக்கரி கொண்டுவரப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
ஏற்கெனவே 3வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.