Published : 04 Mar 2015 09:24 AM
Last Updated : 04 Mar 2015 09:24 AM

சேலம் கோயில் விழா பிரச்சினை எதிரொலி: 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு - 2 வட்டாட்சியர்கள் சிறைபிடிப்பு

சேலம் மாவட்டம் சித்தர் கோயில் அருகே உள்ள திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்கள், கோயிலுக்குள் செல்லவும், கும்பாபிஷேக விழா வில் கலந்துகொள்ளவும் அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை முன் வைத்து ஒரு தரப்பினர் நேற்று முன் தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் இரு தரப்பினரி டையே நடத்திய அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நேற்று அதி காலை சம்பந்தப்பட்ட கோயி லுக்கு சீல் வைத்ததோடு, கோயில் அமைந்திருக்கும் தோப்புக் காடு, திருமலைகிரி, சிவதா புரம், வேடுகாத்தாம்பட்டி, கந்தம் பட்டி, பனங்காடு, சேலத்தாம் பட்டி, சூரமங்கலம், காட்டூர், கீரபாப்பம்பட்டி, அரியாகவுண்டம் பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை ஆட்சியர் மகரபூஷணம் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு வரும் 9-ம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று நடைபெற இருந்த கும்பாபிஷேக விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் கோயில் பிரச்சினையில் உடன்பாடுக்கு வராமல் விடாப்பிடியாக இருக்கும் நிலையில், போலீஸார் மோதல் மற்றும் அசம்பாவித சம்பவங் களை தடுக்க ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு மற்றும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தை காலி செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், சித்தர் கோயிலில் உள்ள முருகன் கோயில் குன்று பகுதியில் முகாமிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். கோயில் கும்பாபிஷேக விழா பிரச்சி னையில் இரு பிரிவு மக்களும் எதிரும், புதிருமாக உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காண 2 வட்டாட்சியர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் செல்வம், வாழப்பாடி வட்டாட் சியர் கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட னர். ஆனால் மக்கள் இருவரை யும் சிறைபிடித்து, சம்பவ இடத்துக்கு ஆட்சியர் வரவேண்டும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x