Published : 25 Mar 2015 09:02 AM
Last Updated : 25 Mar 2015 09:02 AM

இடதுசாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்: இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தகவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் இன்று (மார்ச் 25-ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் நேற்று சுதாகர் ரெட்டி கூறும்போது:

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் எடுத்தனர். பாஜகவுக்கு வாக்களித்தனர். இதனால் இடதுசாரிகளுக்கும் சரிவு ஏற்பட்டது. மக்கள் நலனே முக்கியம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே செயல்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி பிரதமர் மோடி பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். விவசாய நிலத்தைப் பறித்து, பெரிய நிறுவனங்களிடம் அளிப்பதே பாஜக அரசின் நோக்கமாகும். மதவாத அமைப்புகள் பாஜக துணையோடு கலாச்சார பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. சிறுபான்மையினர் மீது தாக்குதல், பேச்சுரிமை, எழுத்துரிமை சுதந்திரத்துக்கு ஆபத்து, எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது. இடதுசாரி கட்சிகள் இணையாவிட்டாலும் ஒத்த கருத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு 3 ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படும். முதன்முறையாக புதுச்சேரியில் மாநாட்டை நடத்துகிறோம். கட்சியின் பல்வேறு அமைப்பு களுக்கு நிர்வாகிகள் நியமனம், அரசியல் தீர்மானங்கள், தேசிய கவுன்சில் செயல்பாடுகள் பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும். இடதுசாரிகள் ஒற்றுமையை பலப் படுத்துவதே முக்கிய நோக்கமாகும் என்றார்.

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், பார்வர்ட் பிளாக் தேபரதபிஸ்வாஸ், ஆர்எஸ்பி அபானி ராய், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் தீபங்கல் பட்டாச்சார்யா, எஸ்யுசிஐ புரோவாஷ்கோஷ் ஆகியோர் பேசுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x