Last Updated : 07 Apr, 2014 12:00 AM

 

Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

இந்தியாவில் வெப்பநிலை உயர்வால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், கொசுக்களின் உற்பத்தி பெருகிவிட்டது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘சிறிய கடி, பெரிய அச்சம்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித் துள்ளது. அதாவது, கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய் களில் இருந்து நம்மை நாமே பாது காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொசு உற்பத்தி அதிகரிப்பு

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநரும், தமிழக பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

உலக அளவில் கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய் களின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. நடமாடும் வெடிகுண்டாகவே கொசுக்கள் உள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்தியா போன்ற அதிக வெப்ப நாடுகளில் வெப்பநிலை 0.521 டிகிரி அதிகரித் துள்ளது. தமிழகத்தில் 1 டிகிரி வரை அதிகமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. கொசுக்களின் முட்டை பொறிந்து அது கொசுவாக மாறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகும்.

ஆனால், இப்போது அதிகரித்துள்ள வெப்ப நிலையால் கொசுக்களின் முட்டைகள் வேகமாக பொறிந்து 7 நாட்களிலேயே கொசு வாக மாறிவிடுகின்றன. இத னால், கொசுக்களின் உற் பத்தி அதிகரித்துள்ளது. மக்கள் கொசுக்கடியால் அவதிப்படு கின்றனர். பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, கொசுக் களின் உற்பத்தியை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

மலேரியா அபாயம்

தமிழகத்தில் மலேரியா பாதிப்பு குறைவாக இருக்கிறது. கிராமப் புறங்களை விட, நகர்ப் புறங்களில் வசிப்பவர்களே மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதியில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். அவர்கள் வேலை நிமித்த மாகவும் சிகிச்சைக்காகவும் தமிழகம் வருகின்றனர். அவர்களை கடிக்கின்ற கொசுக்கள், மற்றவர் களையும் கடிக்கிறது. அதன் மூலம், அவர்களிடமிருந்து மற்றவர் களுக்கும் மலேரியா பரவுகிறது. இதனை அரசு தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.

டெங்கு, சிக்குன்குனியா

டெங்கு, சிக்குன்குனியா மீண்டும் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல்தானா என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப் புள்ளது. எனவே, காய்ச் சலுடன் வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக் கான சிகிச்சையை கொடுக்க வேண் டும். மூளைக் காய்ச்சலுக்கு தடுப்பூசி இருப்பதால், மூளைக் காய்ச்சலை எளிதாக தடுத்துவிடலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x