வேலூரில் 104 டிகிரி

வேலூரில் 104 டிகிரி
Updated on
1 min read

தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் வியாழக்கிழமை வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி, மதுரை, கரூர், பரமத்தி வேலூர், சேலம் ஆகிய இடங்களில் தொடர்ந்து அதிகமான வெயில் பதிவாகி வருகிறது.

வேலூரில் வியாழக்கிழமை காலையில் 102.5 மாலையில் 104, திருச்சியில் காலையில் 102.9, மாலையில் 103.8, மதுரையில் காலை 102.3 மாலையில் 103.3 டிகிரி ஃபாரன்ஹீட்களில் வெயில் பதிவானது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் தொடங்கவிருக்கும் கத்திரி வெயிலின்போது வெப்பம் மேலும் அதிகமாகயிருக்கும். அதே நேரம் கோடை மழை பெய்யவும் கண்டிப்பாக வாய்ப்புள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் 2 செ.மீ. மழை பதிவாகியது.

மற்ற இடங்களில் லேசான தூறல் மட்டுமே இருந்தது. அடுத்த 48 மணி நேரத்தில், இதே போன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ஷ்`சென்னை நுங்கம்பாக்கத்தில் 93.5, மீனம்பாக்கத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கடல்காற்று புதன், வியாழன் ஆகிய நாட்களில் மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in