

சென்னை மவுலிவாக்கம் ரங்கா நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ஹபீப் முகமது (50). மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி மும்பையை சேர்ந்த ஷியாம் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார். அவர் கொடுத்த விசாவை மும்பையில் உள்ள மலேசிய தூதரகத்தில் ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வர, 2006-ம் ஆண்டில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷியாம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஹபீப் முகமது தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த ஹபீப் முகமதுவை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவருக்கு உதவிபுரிந்த குமார் என்பவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.