

சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளில் 3 ஆயிரம் வீடுகள் காலியாக உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ‘மடத் துக்குளம் தொகுதியில் உள்ள தளி, சங்கராமநல்லூர், மடத்துக்குளம், கொமரலிங்கம், கணியூர் ஆகிய பேரூராட்சிகளில் நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு முன்வருமா?’ என்று அதிமுக உறுப்பினர் சி.சண்முகவேலு கேள்வி எழுப்பி னார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறியதாவது:
அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத் தலைமையிடம், கோட்டாட்சியர் தலைமையிடம் ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. உறுப்பினர் குறிப்பிடும் இடங்கள் அனைத்தும் பேரூராட்சி என்பதால் அங்கே வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தும் திட்டம் அரசிடம் தற்போது ஏதும் இல்லை.
சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளில் தற் போது 3 ஆயிரம் வீடுகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அமைச்சர் வைத்தி லிங்கம் கூறினார்.