

சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட வட இந்திய பெண்ணை திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற உதவினார்.
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி நேற்றைய தினம் கோவை சென்றிருந்தார். விமானம் மூலம் நேற்று மாலை அவர் சென்னை திரும்பிய போது, விமானத்தில் அவருடன் பய ணித்த ஸ்வர்னம் கல் என்னும் வட இந்திய பெண்ணுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை யடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த கனிமொழி, தனியார் மருத்துவ மனையை தொடர்பு கொண்டு ஆம்பு லன்ஸையும் வரவழைத்தார். பின்னர் அவரும் உடன் சென்று அந்த பெண்ணை மருத்துவ மனையில் சேர்க்க உதவினார்.