Published : 26 Mar 2015 01:43 PM
Last Updated : 26 Mar 2015 01:51 PM
329 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணியின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவுக்கு தரையில் பட்டு எடுத்த கேட்சிற்கு அவுட் கேட்டார் ஷேன் வாட்சன்.
சிட்னி மைதானம் என்றாலே 2008ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் நமக்கு நினைவுக்கு வரும். நடுவர்கள் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய தவறுகள் இழைத்த டெஸ்ட் போட்டி அது. பெரிய சர்ச்சைக்குள்ளானது அந்த டெஸ்ட் போட்டி.
இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச 4-வது பந்தை ரோஹித் சர்மா டிரைவ் ஆட பந்து ஸ்லிப்பில் ஷேன் வாட்சனிடம் சென்றது. தெளிவாக தரையில் பட்டு கேட்ச் பிடித்துவிட்டு முறையீடு செய்தார்.
கள நடுவர் 3-வது நடுவரை அழைக்க, ரீப்ளேயில் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. நிச்சயம் வாட்சனுக்கும் தெரிந்திருக்கும் தான் கேட்ச் பிடிக்கவில்லை என்று, இருந்தாலும் ஒரு அவுட் கேட்கின்றனர் ஆஸ்திரேலியர்கள்.
நல்ல வேளையாக நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உமர் அக்மல் பேட் செய்த போது பைல்களை தட்டி விட்டார் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின். ஹிட் அவுட் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் அப்போது.
இப்போது வாட்சன், தரையில் பட்ட பந்தைப் பிடித்து விட்டு கேட்ச் என்று முறையீடு செய்கிறார்.