Published : 27 Mar 2015 09:36 AM
Last Updated : 27 Mar 2015 09:36 AM

ஐஆர்என்எஸ்எஸ் 1-டி விண்ணில் ஏவ கவுன்ட் டவுண் தொடக்கம்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான 59.30 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 5.49 மணிக்குத் தொடங்கியது. நாளை (28-ம் தேதி) மாலை 5.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-27 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவத் திட்ட மிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோளை மார்ச் 9-ம் தேதி ஏவ ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைவிடப் பட்டது.

இந்த செயற்கைக்கோளின் மூலம் இடங்கள், திசைகள் ஆகிய தகவல்களை துல்லிய மாக பெற முடியும். இதேபோன்ற தேவைகளுக்காக இதுவரை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஆகிய 3 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x