

குறைந்த செலவில் புதிய தொழில்நுட்பங்களை கண்டு பிடிக்குமாறு விஞ்ஞானிகளுக்கு மத்திய அறிவியல் தொழில்நுட் பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று சென்னை வந்தார். அவர் அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ), தரமணியில் உள்ள கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறு வனம் (எஸ்ஐஆர்சி) ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சரான அவர், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) துணைத் தலைவரும் ஆவார். மேற்கண்ட இரு ஆராய்ச்சி நிறுவனங்களும் சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. ஆய்வுப் பணி முடிந்த பிறகு எஸ்ஐஆர்சி நிறுவன அரங்கில் விஞ்ஞானிகள் மத்தியில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:
பெங்களூரு எப்படி இந்தியா வின் அறிவியல் நகரமாக திகழ் கிறதோ, அதேபோல் சென்னை இந்தியாவின் அறிவுசார் நகரமாக விளங்குகிறது. சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புகழ்பெற்ற நிபுணர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.
மிகப்பெரிய அளவிலான, கட்டிடக் கலைநயம் மிக்க கட்டிடங் களை கட்டிய பாரம்பரிய பெருமை இந்தியர்களுக்கு உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரம்மாண்டமான கட்டிடங்கள் நம் நாட்டில் கட்டப் பட்டு இருக்கின்றன. அந்த பாரம்பரிய அறிவை பயன் படுத்தி தொழில்நுட்பப் பிரச் சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நம் நாட்டுக்கு உகந்த வகையில், குறைந்த செலவில், அனை வரையும் சென்றடையக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வக அளவிலேயே முடங்கிவிடாமல், மக்களை சென்றடைய வேண்டும். இல்லா விட்டால் அந்தத் தொழில்நுட்பங் களால் ஒருபயனும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் எம்.ஓ.கார்க், சிஎல்ஆர்ஐ இயக்குநர் ஏ.பி.மண்டல், எஸ்இஆர்சி தலைமை விஞ்ஞானி கே.ரவிசங்கர் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.