Published : 17 Mar 2015 08:35 AM
Last Updated : 17 Mar 2015 08:35 AM

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது: 11.23 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. தனித் தேர்வர்கள் உள்பட 11 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு 31-ம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையே, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கிறது.

தமிழகத்தில் 3,298 மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 405 பேர். மாணவிகள் 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வெழுதுகின்றனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்வதற்கும் வழங்கப்படும். 9.30 மணிக்கு தேர்வு எழுதத் தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x