

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், கேதாண்டப்பட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் தேவன். நகை வடிவமைப்பாளரான இவர், தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களைக் பயன்படுத்தி பல கலைப் பொருட்களை வடிவமைத்துள்ளார்.
மங்கள்யான் விண்கலம் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட் டதைப் பாராட்டி, அப்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ண னுக்கு தங்கம், வெள்ளி ஆகியவற்றால் 4.400 கிராமில் மாதிரி ராக்கெட்டை உருவாக்கி பரிசாக அளித்தார்.
தற்போது, உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மாதிரி கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத் துள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேவன் கூறியதாவது:
10-ம் வகுப்பில் தோல்வியடைந் ததால், நகை வடிவமைப்பு தொழி லைக் கற்றுக் கொண்டேன்.
கடந்த 2003-ல் 80 மில்லி கிராம் எடையில் மாதிரி உலகக் கோப்பையை வடிவமைத்தேன். தொடர்ந்து, பல்வேறு கலைப் பொருட்களை செய்துள்ளேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வென் றால், தங்கம் மற்றும் வெள்ளியால் மாதிரி கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி பரிசளிக்க முடிவு செய் தேன்.
அதன்படி, 73 கிராம் வெள்ளி, 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாதிரி கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்துள்ளேன். இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம்.
11 வீரர்கள், 2 பேஸ்ட்மேன்கள், 2 நடுவர்கள், உயர் கோபுர மின் விளக்குகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரி ஆகியவற்று டன் அதை வடிவமைத்துள்ளேன்.
இந்திய அணி கோப்பையுடன் நாடு திரும்பினால், கேப்டன் டோனியிடம் இந்த மாதிரி கிரிக்கெட் மைதானத்தைப் பரிசாக வழங்குவேன் என்றார் தேவன்.