மென்பொருள் நிறுவனங்களுக்கு நல்ல அறிகுறிகளை மத்திய பட்ஜெட் தந்துள்ளது: நாஸ்காம் தலைவர் பேச்சு

மென்பொருள் நிறுவனங்களுக்கு நல்ல அறிகுறிகளை மத்திய பட்ஜெட் தந்துள்ளது: நாஸ்காம் தலைவர் பேச்சு
Updated on
1 min read

புதிதாக தொழில் தொடங்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கு மத்திய பட்ஜெட் நல்ல அறிகுறி களை அளித்துள்ளது என்று நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திர சேகரன் கூறியுள்ளார்.

மென்பொருள் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ் காம் அமைப்பின் மண்டல மாநாடு சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகரன் பேசிய தாவது:

மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக மென்பொருள் நிறு வனங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. ‘சேது’ திட்டத்தின் கீழ் புதிய மென்பொருள் நிறுவனங்கள் அமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மென் பொருள் துறையில் புதிய தடம் பதிக்க விரும்புவோருக்கான காலம் இது. மென்பொருள் நிறுவனங்கள் தொழில் தொடங்கு வதற்கு ஏற்ற சூழலை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இங்கி லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. நான்காவது இடத்தில் உள்ள இந்தியா சீக்கிரமே 2வது இடத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மென்பொருட்கள் கவுன்சிலின் தலைவர் ரவி குருராஜ் பேசும்போது, “சென்னையில் நிறைய மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. மாணவர்களும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றனர். தொழில் முனைவோருக்கான பொருட்கிடங்கு சென்னையில் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in