Published : 14 Mar 2015 09:39 AM
Last Updated : 14 Mar 2015 09:39 AM

புதுக்கோட்டை நகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மோதல்: 3 திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை நகராட்சியின் நகர் மன்ற சாதாரண கூட்டம் அதன் தலை வர் ஆர்.ராஜசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.ஏ.அப்துல் ரகுமான், ஆணையர் ஜெ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

திமுக கவுன்சிலர்கள் நெற்றி யில் நாமம் போட்டு, காதில் பூ வைத்தவாறு பங்கேற்றனர். கூட்டத்தில், ரூ. 2.57 கோடி உபரியாக 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நக ராட்சித் தலைவர் ஆர்.ராஜசேகரன் பேசினார்.

அப்போது, அதிமுக கவுன்சிலர் பாஸ்கர் எழுந்து, மன்றத்தின் அனுமதி பெறாமல் ஒருபோதும் கருணாநிதி படத்தை வைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து கூட்ட அரங் கில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மாறி மாறி கோஷமிட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. தொடர்ந்து கவுன்சிலர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது திமுக கவுன்சிலர்கள் சுப.சரவணன், அறிவுடைநம்பி, சந்தோஷ், மணிவேல், ராமசெல்வராஜ் உள்ளிட்டோர் கூட்ட அரங்கில் கருணாநிதி படத்தை மாட்டினர். உடனே கருணாநிதி படத்தைப் பறிக்க அதிமுகவினர் முயன்றனர்.

இதனால், கூட்ட அரங்கில் இருந்த ஜெயலலிதா படத்தை திமுகவினர் கழற்றினர். தொடர்ந்து கருணாநிதி படத்தை மன்றத்தில் வைக்கக் கோரி திமுக கவுன் சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது, நகர்மன்றத் தலை வர் குறுக்கிட்டு அமளியில் ஈடுபட்டவர்களை சமாதானப் படுத்தினார். அதன்பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

3 பேர் சஸ்பெண்ட்

நகராட்சி கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் சுப.சரவணன், ராம.செல்வராஜ், அறிவுடைநம்பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், இவர்கள் மூவரும் அடுத்த 2 கூட்டங்களில் பங்கேற்க முடியாதெனவும் நகராட்சித் தலைவர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x