Published : 20 Mar 2015 09:14 AM
Last Updated : 20 Mar 2015 09:14 AM

4 ஆண்டில் 6,922 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

தமிழக அரசு கலைப் பண்பாட் டுத் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் காட்சி தொடக்கவிழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு சான்றிதழ் பயிற்சி தொடக்க விழா நேற்று எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங் கில் நடைபெற்றது.

தொல்லியல் துறை மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை ஆணை யர் தா.கார்த்திகேயன் அனைவரை யும் வரவேற்றார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் முன் னிலை வகித்தார். மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியை தொடங்கி வைத் தார்.

உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சான்றிதழ் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச் சர் ஆர்.காமராஜ், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள திருக்கோயில்கள் தொன்மை மற்றும் பழமை மாறாது பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான நுண்ணறிவை பெறுவதற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு ரூ.24 லட்சம் செலவில் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் புனரமைக்கப்பட்டன. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களும் புனரமைக்கப்பட்டன.

கடந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 6,922 கோயில் கள் புனரமைக்கப்பட்டு குட முழுக்கு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாநில அளவி லான ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்தி சிறந்த ஓவியங்கள், சிற்பங்கள் படைத்த 40 கலைஞர் கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது, பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு கலைக்கூடத்தில் நேற்று தொடங்கிய ஓவியம், சிற்பக் கண்காட்சி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x