துறைமுகங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு: தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

துறைமுகங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு: தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெரிய துறைமுகங்களை தனியார்மய மாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை துறைமுக தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

நாட்டில் மொத்தம் 11 பெரிய துறை முகங்கள் உள்ளன. இவற்றை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைக் கண்டித்து மார்ச் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தோம். இது தொடர்பாக மார்ச் 4-ம் தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் எங்களை அழைத்திருந்தார். இந்நிலை யில், மத்திய பட்ஜெட்டில் பெரிய துறை முகங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தனியார் மயமாக்கப்பட்டால், துறை முக சட்டத்தின் கீழ் இயங்கும் பெரிய துறைமுகங்கள் அனைத்தும் இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர் களாக மாற்றப்பட்டு, அவர்களது பணிப் பலன்கள் மறுக்கப்படும். இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள், 2 லட்சம் ஓய்வூதியதாரர்களின் நிலை கேள்விக்குறியாகும். எனவே, தனியார் மயமாக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in