முழு அடைப்புப் போராட்டத்துக்கு திராவிடர் கழகம், மமக ஆதரவு

முழு அடைப்புப் போராட்டத்துக்கு திராவிடர் கழகம், மமக ஆதரவு
Updated on
1 min read

காவிரி பிரச்சினைக்காக தமிழகத்தில் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரிப் படுகை விவசாயி களின் கால்நூற்றாண்டு பிரச் சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, நதிநீர்ப் பங்கீடு தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மத்தியிலுள்ள மோடி அரசு இன்னமும் காலந் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக அரசு காவிரியின் உபரி நீரைத் தேக்கி மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகளைக் கட்ட, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரிப் பிரச்சினை யில் கர்நாடக மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன் றிணைந்து குரல் கொடுப்பதைப் போல், தமிழகத்திலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு இந்த முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியாக்கித் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி

காவிரி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு அறிவித் துள்ளதைக் கண்டித்து நடைபெற வுள்ள முழு அடைப்புப் போராட்டத் தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு ஜனநாயக கட்சி

கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

முழு அடைப்புப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து சட்ட உதவிகளையும் இலவசமாக வழங்கவும் முடிவு செய்திருப்பதாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in