ரவுடி கொலை வழக்கில் பாஜக பெண் கவுன்சிலர் கைது: கணவரை போலீஸ் தேடுகிறது

ரவுடி கொலை வழக்கில் பாஜக பெண் கவுன்சிலர் கைது: கணவரை போலீஸ் தேடுகிறது
Updated on
1 min read

திருப்பூரைச் சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பெண் கவுன்சிலர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர் செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). மர வியாபாரியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இவர், தனது காரில் கோவை துடியலூர் மணீஸ் நகர் பகுதியில் உள்ள பாஜகவை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் வத்சலா வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்றுள்ளார். உடலில் காயங்களுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்த அவரை, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிலர் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

இது குறித்து துடியலூர் போலீஸார் நடத்திய விசாரணையில், பாஜக கவுன்சிலர் வத்சலா வீட்டுக்கு ஆறுமுகம் சென்றபோது, வீட்டில் இருந்த வத்சலா தரப்பினருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. கட்டையால் ஆறுமுகம் தாக்கப் பட்டுள்ளார். சுயநினைவு இழந்து விழுந்த அவரை மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளனர்.

ஆறுமுகத்துக்கும், வத்சலாவுக் கும் இடையே தொழில் தொடர் பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மோதல் ஏற்பட்டுள் ளது தெரியவந்துள்ளது. இது தொடர் பாக வத்சலா உட்பட சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கவுன்சிலர் வி. வத்சலா(42), உதவியாளர் இளங்கோ மற்றும் கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான வத்சலாவின் கணவரை போலீஸார் தேடிவருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in