Published : 22 Mar 2015 11:07 AM
Last Updated : 22 Mar 2015 11:07 AM

கிரானைட் அதிபர்கள் வாங்கிய நிலங்கள்: பத்திரப் பதிவு அலுவலர்கள் சகாயத்திடம் அறிக்கை தாக்கல்

கிரானைட் அதிபர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் குறித்த விவரங்களை சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் பத்திரப் பதிவு அலுவலர்கள் தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் 9-ம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறார். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் குறித்த ஆவணங்களை நேற்று முன்தினம் மதுரை காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந் திர பிதாரி தாக்கல் செய்தார்.

நேற்று மதுரை மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர்கள் கண்ணன், ஹெலன் சகாயராணி ஆகியோர் சகாயத்தை சந்தித்தனர். கிரானைட் குவாரி அதிபர்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித் துள்ளதாகவும், இதில் பஞ்சமி நிலங் களும் உள்ளதாகவும் சகாயத்திடம் ஏராளமானோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக பத்திரப்பதிவு அலு வலகத்தில் நிலப்பதிவு, கிராமங் களில் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு விவரங்களை சகாயம் கேட்டிருந்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா மாறுதல், நில உரிமையாளர்கள் விவரத்தை ஏற்கெனவே அளித்துள்ளனர். பத்திரப்பதிவு விவரங்களை அளிக்க காலஅவகாசம் கேட்டிருந்த பதிவுத் துறை அலுவலர்கள் நேற்று சகா யத்தை சந்தித்தனர். குவாரி அதிபர் கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட நில விவர அறிக்கையை பதிவாளர் கள் கண்ணன், ஹெலன் சகாயராணி தாக்கல் செய்தனர். அவர்களிடம் சகாயம் விசாரணை நடத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லதா சகாயத்தை சந்தித்தார். நில பராமரிப்புத் துறையின் அனுமதி இல்லாமலேயே கிராமக் கணக்கு, பத்திரங்கள் பதிவு மூலம் ஏராளமான நிலங்கள் உரிமை மாற்றம் செய்யப்பட்டது குறித்து சகாயம் விசாரணை நடத்தினார்.

சென்னையில் விசாரணை

சகாயத்துக்கு வந்த இரண்டா வது மிரட்டல் கடிதம் என்.கஸ்தூரி ரங்கன் என்பவரது பெயரில் சென்னையிலிருந்து அனுப்பப்பட் டுள்ளது. சென்னை கோபாலபுரம் அஞ்சலகத்தின் முத்திரை அந்தக் கடிதத்தில் உள்ளது. அரசுக்கு எதிராக அறிக்கையில் எதையாவது குறிப்பிட்டால் கொலை செய்வோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இதனால் யாரோ திட்டமிட்டு பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கில் கடிதத்தை அனுப்பினரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x