Published : 17 Mar 2015 10:40 AM
Last Updated : 17 Mar 2015 10:40 AM

நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு ரூ.48,815 கோடி: தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க நிழல் நிதிநிலை அறிக்கையில் பாமக யோசனை

தமிழக அரசின் கடன் சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பாமக வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கையில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக நிழல் நிதிநிலை அறிக்கையை கடந்த 12 வருடங்களாக பாமக வெளி யிட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16-ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில் நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

பாமக தற்போது வெளியிடும் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு ரூ.48,815 கோடி ஆகும். இதில் வேளாண் மைத் துறைக்காக ரூ.13,688 கோடி ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 748 கோடி கடன் சுமை உள்ளது. தமிழக அரசு தனது வருவாயில் 12.28 சதவீதத்தை வட்டிக்காகவே செலவிடுகிறது.

இந்த கடன் சுமையைப் போக்க, அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்படும். குறைந்த மனிதவளத்தின் மூலம் நடத்தக்கூடிய குவாரிகளை அரசே நடத்தும். மற்றவை போட்டி ஏலம் மூலம் தனியாருக்கு விடப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

60 சதவீத தாது மணல் குவாரி களை அரசே நடத்தும். இதனால், ரூ.60 ஆயிரம் கோடி கிடைக்கும். ஆற்று மணல் விற்பனை முறைப் படுத்தப்படுவதால், ரூ.15 ஆயிரம் கோடியும் வணிகவரியை முறைப் படுத்துவதால் ரூ.85 ஆயிரம் கோடி யும் கூடுதலாக கிடைக்கும்.

இதில் ரூ.45 ஆயிரம் கோடி கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றை இலவசமாக வழங்குவதற்காக ஒதுக் கப்படும். மீதமுள்ள தொகை கடன் தவணையாக செலுத்தப்படும்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். காவல்துறை சுதந் திரத்துக்காக ஆணையம் அமைக்கப் படும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். 10 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாவட்டங்கள் 2 ஆக பிரிக்கப்படும். இடுபொருட்கள் இலவசமாக்கப்படும். வேலைவாய்ப்புக்காக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 11,960 மெகாவாட் மின் திட்டங்கள் செயல் படுத்தப்படும். மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கிடையாது.

தமிழகத்தில் பாமக தவிர எந்த அரசியல் கட்சியும் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதில்லை. இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை நிதித்துறை செயலரிடம் வழங்க உள்ளோம்.

இதற்கு முன்பெல்லாம் எங்களது நிழல் நிதிநிலை அறிக்கை யில் இடம்பெற்ற திட்டங்கள் அரசு பட்ஜெட்டிலும் இணைக்கப்பட்டுள் ளன.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x