

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
போர்க்குற்றம் பற்றிய ஐநா அறிக்கை வெளியிடுவதில் தாமதம் தொடர்கிறது. இதற்கு அமெரிக்காவே காரணம் என்று தமிழ் அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனால், அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200பேரை போலீஸார் கைது செய்தனர்.