Published : 13 Mar 2015 09:54 AM
Last Updated : 13 Mar 2015 09:54 AM

பாட்டியைக் கொன்ற 2 பேரன்கள் கைது: மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை

செலவுக்கு பணம் கொடுக்காததால் பாட்டியைக் கொன்ற 2 பேரன் களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதனால் அவர்களது பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி பழநிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜகுமாரி(65). இவர் தனியார் பள்ளி தையல் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சில ஆண்டுகளாக திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் இவர் வசித்து வந்தார். கடந்த 6-ம் தேதி அதிகாலை இவர் மர்ம மான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சின்னாளப் பட்டி போலீஸில் உறவினர்கள் புகார் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி யாயின. ராஜகுமாரிக்கு திருமண மாகவில்லை. இவரது அக்காள் பூபதிம்மாள். அவரது மகள் கவுரி. இவரது மகன்கள் கோடீஸ்வரன் (23). ஞானமணிகண்டன்(21).

கோடீஸ்வரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு, சென்னை தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். ஞானமணிகண்டன் சென் னையில் பொறியியல் படிப்பு படிக்கிறார். சில வாரங் களாக இவர் கல்லூரிக்கு செல் லாமல் அண்ணனுடன் தங்கியிருந் துள்ளார்.

இருவரும் பாட்டி ராஜகுமாரி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல வுக்கு பணம் கேட்பார்களாம். அவரும் பணம் கொடுப்பார். கடந்த 5-ம் தேதி சொந்த ஊரான தேனி பழநிசெட்டிப்பட்டிக்கு சென் றுள்ளனர்.

ஞானமணிகண்டன் கல்லூரிக்கு செல்லாததால் பெற் றோர் அவரை திட்டியுள்ளனர். பெற் றோருடன் கோபித்துக்கொண்டு, அன்று இரவு ராஜகுமாரியின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவரும் இருவரையும் திட்டி பணம் கொடுக்க மறுத்துள்ளார். ஆத்தி ரமடைந்த அண்ணன், தம்பி இருவரும் அவரை தலையணை யால் அழுத்தி கொலை செய் துள்ளனர். அவரது ஏடிஎம் கார்டு மூலம் ரூ.16,900 பணம் எடுத்து விட்டு தலைமறைவானது போலீ ஸார் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான கோடீஸ்வரன், ஞானமணிகண்டன் ஆகியோரின் பெற்றோர் கவுரி, அவரது கணவர் வனராஜ் நேற்று காலை வத்தலகுண்டில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வந்துள்ளனர். மகன்கள் இரு வரையும் போலீஸார் கைது செய்த தகவல் அறிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனமுடைந்த கவுரி, வனராஜ் இருவரும் வத்தலகுண்டு அருகே எலுவனம்பட்டியில் அரசு பள்ளி அருகே ஓடையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இருவர் உடல்களையும் வத்தல குண்டு போலீஸார் கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.

காட்டிக் கொடுத்த எஸ்எம்எஸ்

ராஜகுமாரியை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தபோது, அவரது செல்போனை எடுத்து பார்த்தனர். அதில் அன்று அதிகாலை 3.45 மணிக்கு ரூ.16,900 எடுத்ததாக வங்கி எஸ்எம்எஸ் வந்திருந்தது. இதைப் பார்த்த உறவினர்கள் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பணம் எடுத்த ஏடிஎம் கேமராவில் போலீஸார் பார்த்தபோது ஒரு இளைஞர் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு பணத்தை எடுத்தது தெரியவந்தது. ராஜகுமாரியின் வீட்டு மாடியில் தங்கிப்படித்த பிளஸ் 2 மாணவர் மீது போலீஸார் சந்தேகமடைந்து விசாரித்தனர். அவர், கடைசிவரை தான் கொலை செய்யவில்லை என்றும், ராஜகுமாரி வீட்டுக்கு அடிக்கடி அவரது பேரன்கள்தான் வந்து செல்வர் என்றும் தெரிவித்தார். அதனால் போலீஸார் சந்தேகம் அவரது பேரன்கள் கோடீஸ்வரன், ஞானமணிகண்டன் மீது திரும்பியது. விசாரணையில் அவர்கள்தான் பணத்துக்காக பாட்டியைக் கொன்றது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x