Published : 27 Mar 2015 09:43 AM
Last Updated : 27 Mar 2015 09:43 AM

கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தி னர், 24 மணி நேர உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டுள்ளனர்.

வார ஓய்வு, 6 மணி நேர வேலை, எளிமையான இன்ஜின் வடிவமைப்பு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தென் மண்டலத்தின் சார்பில், 24 மணி நேர உண்ணாவிரதப் போராட் டத்தை நேற்று காலை தொடங் கினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடை பெறும் போராட்டத்துக்கு சங்கத் தின் தலைவர் வி.ஆர்.பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.முரளி முன்னிலை வகித் தார். சங்கத்தின் சென்னைக் கோட்ட செயல் தலைவர் வி.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:

சமீபகாலமாக ரயில் விபத்துக் கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மனித தவறும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள் ளது. ரயில் ஓட்டுநர்கள் சிவப்பு விளக்கை தாண்டுவது என்பது முக்கியமான தவறாகக் கருதப் படுகிறது. இதற்காக, வேலையை விட்டு நீக்கும் அளவுக்கு கடுமையான தண் டனையும் வழங்கப்படுகிறது.

இந்த மனித தவறை களை வதற்கு ரயில்வே நிர்வாகம் பலதரப்பட்ட குழுக்களை அமைத்து அதன் பரிந்துரை களை பெற்றுள்ளது.

ஆனால், இன்றுவரை அப்பரிந்துரைகள் எதையும் அமல்படுத்தவில்லை. சிவப்பு விளக்கை தாண்டும் ரயில் ஓட்டு நர்களை பணிநீக்கம் செய்வதை ரத்து செய்யும் நீதிபதி எச்.ஆர்.கண்ணா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். உயர் அதிகார விசாரணைக் குழு பரிந்துரை செய்த 6 மணி நேர வேலை, வார ஓய்வு, தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் பணி செய்வதை ரத்து செய்தல் வேண்டும். மேலும், ஓட்டுநர்கள் எளிதாக கையாளக் கூடிய வகையில் ரயில் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இப்போராட்டத்தில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங் களைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இன்று போராட்டம் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x