

தாம்பரத்தில் உள்ள வருமானவரி அலுவல கத்தில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக வருமானவரி சேவை மையம் (ஆயகர் சேவா கேந்திரா) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை வருமானவரித் துறை முதன்மை தலைமை ஆணையர் த.ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வருமானவரித் துறை தலைமை ஆணையர் அனிதா குப்தா, ஆணையர் ஜே.ஆல்பர்ட், இணை ஆணையர் லஷ்மி நாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன மேலாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த சேவை மையத்தில் வரி செலுத்துபவர்களின் மனுக்கள் அனைத்தும் பெறப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவேற்றப்படும். இந்த மனுக்களின் மீதான நடவடிக்கைகளையும் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும்.