

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை சார்பில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டங்கள் சென்னையில் 16 இடங் களில் நாளை (மார்ச் 14) நடைபெற உள்ளன.
இது தொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை சார்பில் மாதந் தோறும் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டங்களை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் மார்ச் மாதத்துக் கான கூட்டம் நாளை நடைபெறு கிறது. இக்கூட்டங்களில் பொது விநியோக திட்டத்தை செயல் படுத்தும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோகக் கடை களின் செயல்பாடுகள், பொருட் கள் கிடைப்பதில் சிக்கல் ஆகியவை குறித்து புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.