Published : 22 Mar 2015 10:38 AM
Last Updated : 22 Mar 2015 10:38 AM

ஸ்ரீரங்கத்தில் ரகசிய நிலவறை கண்டுபிடிப்பு: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்பில்லை - வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து

தமிழக கோயில்களில் உள்ள ரகசிய நிலவறைகளில் தங்கப் புதையல்கள் கிடைக்க வாய்ப் பில்லை என்கின்றனர் வர லாற்று ஆய்வாளர்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மிக வும் பழமையானது. இக்கோயிலில் கடந்த 2000-வது ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது குடமுழுக்கு செய்வதற்காக திருப் பணி வேலைகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோயிலின் ரங்கா, ரங்கா கோபுரத்தை அடுத் துள்ள ரங்கவிலாச மண்டபத்தின் மேற்குப் பகுதியில் தரை தளத்திலிருந்து சுமார் 4 அடி உயரம் உள்ள கருங்கல் கட்டுமானத்தில் வேணுகோபால சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதி 8-ம் நூற்றாண்டில் கர் நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு ஹொய்சால மன்னரால் கட்டப்பட்டதாக கோயிலின் தல வரலாற்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருப்பணிக்காக கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சன்னதியில் தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டி ருந்தனர். அப்போது மகா மண்டபத்தின் வடக்குப் புற கருங்கல் சுவரில் தன்வந்திரி பெரு மாளின் உருவம் ஓவியமாக வரை யப்பட்டிருந்த 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட பகுதி மட்டும் சற்று உள்வாங்கியிருந்தது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ஜெயராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

“அதிகாரிகள் முன்னிலையில், ஓவியம் இருந்த பகுதியை தொழி லாளர்கள் அகற்றினர். அதில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகல மும் கொண்ட வாசல் இருந்தது. இதன் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, இந்த வாசலுக்கும் சந்நிதியின் வடக்குப் புற பிரதான சுவருக்கும் இடையே 4 அடி அகலம், சுமார் 20 அடி நீளம் கொண்ட ஒரு அறை இருந்தது. தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்தபோது அந்த சிறிய அறையின் கிழக்கு மூலையில் 2 அடி சதுர கல் பதிக்கப்பட்டிருந்தது. அந்த கல்லை அகற்றியபோது, அதன் உள்ளே 10 அடி ஆழம், 4 அடி அகலம், 20 அடி நீளமும் கொண்ட நிலவறை இருந்தது தெரியவந்தது.

இந்த அறை மற்றும் நிலவறை யில் எவ்வித பொருளும் கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து இந்த அறைக்கு தற்காலிக கதவு பொருத்தப்பட்டு பூட்டி வைக்கப் பட்டுள்ளது” என்றார் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜெயராமன்.

கேரள மாநிலம், திருவனந்த புரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் ரகசிய அறைகளில் விலை மதிப்பிட முடியாத புதை யல் குவியல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஒரு சந்நிதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ரகசிய நிலவறையில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட் கள் இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்த அறையில் எவ்வித பொருட்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நகைகள், சிலைகளை பாதுகாக்க

இதுகுறித்து டாக்டர் மா.இராச மாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் ‘தி இந்து’விடம் கூறியபோது, “தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இது போன்ற ரகசிய அறைகள் பல்வேறு காலகட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சுவாமிக்கு அணிவிக்கப்படும் விலை உயர்ந்த நகைகள், காசுகள், தங்கம், ஐம்பொன்னால் செய்யப்பட்ட விலை மதிக்க முடியாத உற்சவர் சிலைகள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகவே இந்த நிலவறைகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஏற்கெனவே, கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியில் புதையல் இருப்பதாக வந்த தகவலையடுத்து அரசு உத்தரவின்பேரில், நான் ஆய்வு மேற்கொண்டேன். அங்கும் எதுவும் இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்களில் புதையல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை என்பது தான் எனது கருத்து” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x