Published : 10 Mar 2015 10:26 AM
Last Updated : 10 Mar 2015 10:26 AM

புதுப்பட திருட்டு டிவிடிக்கள் விற்றதாக 2 பேர் கைது

திருட்டு டிவிடிகளை விற்றதாக, புதுச்சேரியில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திரைப்பட இயக்குநர் சேரன், வீட்டிலேயே டிவிடிக்கள் மூலம் படத்தை பார்க்கும் ‘சி2ஹச்’ என்ற புதிய முறையில் அண்மையில் திரைப்படத்தை வெளியிட்டார். டிவிடிக்களை விற்பனை செய்ய முகவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அந்தப் படத்தின் டிவிடிக்கள் முறைகேடாக விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சி2ஹெச் புதுச்சேரி விநியோகஸ்தரான முத்து போலீஸில் புகார் கொடுத்தார்.

உருளையன்பேட்டை போலீ ஸார், நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையம் அருகே மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு டிவிடி விற்பனைக் கடையில் சோதனை நடத்தி, 4 புதிய திரைப்பட டிவிடிக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கடையின் உரிமை யாளரான முதலியார்பேட்டையைச் சேர்ந்த சீனுவாசன் (30), ஊழியர்களான சொக்கநாதன் பேட்டையைச் சேர்ந்த செல்வம் மகன் விஜி (26), பெரியார்நகரைச் சேர்ந்த சோமு மனைவி அனிதா (36) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, சீனுவாசன், விஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x