Published : 28 Mar 2015 09:40 AM
Last Updated : 28 Mar 2015 09:40 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் ஓய்வூதியர்களுக்கு நேர்காணல்

தமிழக அரசு ஓய்வூதியர்கள், தங்களது விவரங்களை புதுப்பிக் கும் வகையில் கருவூல அலுவல கங்களில் நடத்தப்படவுள்ள நேர் காணலில் பங்கேற்க வேண்டும். தவறுவோருக்கு, ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் சண்முகம், வீரராகவராவ் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் ஆண்டு கணக்கெடுப்புக்காக கருவூல அலுவலகங்களில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 30-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களது விவரங்களை கருவூலங்களுக்கு வந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், வருமான வரிக் கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை (வைத்திருப்போர் மட்டும்) ஆகியவற்றின் நகல்களையும் எடுத்து வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர் கள், வாழ்வுச் சான்றுக்கான படிவத்தில் மேற்கூறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்பலாம்.

அதேபோல, நேரில் வர இயலாத குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதிய வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை மேலாளர் அல்லது வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அரசு பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் ஆகியோரில் ஒருவரிடம், மறுமணம் புரியாதவர் என்ற சான்று பெற்று வர வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள், வெளிநாட்டில் உள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கான மாதிரி படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-27238321 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

திருவள்ளூர்

இதேபோல் திருவள்ளூர் மாவட்ட ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூலத்தை அணுகி நேர் காணலில் பங்கேற்கலாம் என்றும் வரமுடியாதவர்கள் பென்சன் புத்தகத்தின் நகல் மற்றும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x