

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளன்று மொழித்தாள் தேர்வு நடந்தது.
தமிழகத்தில் 3,298 மையங்களில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 11 லட்சத்து 23 ஆயிரத்து 120 பேர் தேர்வெழுதினர்.
காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. கற்றல் குறைபாடு உடையவர்கள், பார்வைய ற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுத லாக ஒரு மணி நேரம் அளிக் கப்பட்டது. அவர்கள் உதவி யாளர்களின் துணையுடன் தேர்வில் கலந்துகொண் டனர். காப்பி அடித்தல், பிட் அடிப்பது உள்ளிட்ட முறைகேடு களை தடுக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் வாழ்த்து
சென்னையில் 209 மையங்களில் 57 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர்.
எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத் தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, முதன்மைச் செயலர் டி.சபீதா ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக, தேர்வெழுதச் சென்ற மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாழ்த்து கூறினர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மண்ணடி முத்தையால்பேட்டை மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி ஆய்வு மேற் கொண்டார்.
தேர்வறைகளில் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் உள் ளதா? குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளதா என்பதை அவர் ஆய்வுசெய்தார்.