

காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதங்களின் விவரங்களை இணையதளங்களில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது உறவி னர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதன்பேரில், வழக் குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதங்களின் விவரங்கள் அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக காவல்துறையினர் சேகரித்த விவரங்கள் www.tnpolice.org, http://ncrb.gov.in/missing.htm, http://www.trackthemissingchild.gov.in/trackchild/index/php, http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/MissingHomePage?1 என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதங்களின் விவரங்களை இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.