

கடல்சார் ஆராய்ச்சி செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1-டி செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் மார்ச் 9-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டிருந்தது. செயற்கைக்கோளை ஏவுவதற்கான முதல்கட்ட பரிசோதனை முடிந்துவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செயற்கைக்கோளில் உள்ள ஒரு டிரான்ஸ்மீட்டரில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்த கட்ட சோதனை நடத்தி ஆய்வுசெய்து டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய வேண்டியிருப்பதால் பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதை அறிவித்துள்ளது.