

தமிழகத்தில் அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட் பாளருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாமக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீருக்காக காவிரியை நம்பியுள் ளனர். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேகேதாட்டு அணை கட்டினால் காவிரி பாலைவனமாக மாறிவிடும். ஒரு காலத்தில் தமிழகத்தில் பால் போல் ஓடும் ஆறாக பாலாறு இருந்தது. ஆந்திராவில் 36 தடுப் பணைகள், கர்நாடகத்தில் 4 தடுப் பணைகள் கட்டியதால் பாலாறு பாலைவனமாக மாறியது. மேகே தாட்டுவில் அணை கட்டினால், காவிரியும் பாலைவனமாக மாறிவிடும்.
இது அரசியல் பிரச்சினை இல்லை. மக்களின் உயிர் நாடி பிரச்சினை. இதை அரசியல் ஆக்கக்கூடாது. தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு இடைக்கால தடை பெற வேண்டும். இது எதையும் செய்யாமல் இருக்கும் தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முதல்வர் யாகம் நடத்துகிறார். அமைச்சர்கள் எல் லாம் கோயில் கோயிலாக சுற்று கிறார்கள். தமிழக ஆட்சியாளர் களுக்கு மக்களைப் பற்றியோ, விவசாயிகளைப் பற்றியோ அக் கறையும் கவலையும் இல்லை. அவர் களின் கவலை எல்லாம் கர்நாட கத்தில் உள்ள வழக்கு பற்றிதான்.
காவிரி பிரச்சினை 4 மாநிலங்களுடையது. கர்நாட கத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துள்ளன. கேரளாவில் ஒரு பிரச்சினை என்றால் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் ஒன்று சேர்கின்றன. தமிழகத்தில் ஒற்றுமை இல்லை. இந்த அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும். தமிழகம் தன் உரிமைகளை இழந்ததற்கு 2 திராவிடக் கட்சிகள்தான் முக்கிய காரணம்.
முழு அடைப்புக்கு ஆதரவு
தமிழகத்தில் 28-ம் தேதி நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாமக ஆதரவு அளிக்கிறது. தமிழக மக்களும் ஆதரவு தரவேண்டும். முக்கியமாக தமிழக அரசும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.