

பெண் போலீஸிடம் தவறாக பேசும் போலீஸ் அதிகாரி குறித்து கூடுதல் ஆணையர் விசாரணை நடத்திவருகிறார்.
பெண் போலீஸ் ஒருவரிடம் உதவி ஆணையர் ஒருவர் தவறாக பேசும் பேச்சு 'வாட்ஸ்-அப்' மூலம் பரவி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 3 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த போனில் பேசும் காவல் உதவி ஆணையர் யார்?, அவரிடம் பேசிய பெண் போலீஸ் யார்? இதில் என்னென்ன குற்றங்கள் நடந்தன என்பது குறித்து விசாரிக்க, சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர் ரவிக்குமார், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார். ஓரிரு நாட்களில் விசாரணை முடிவை காவல் ஆணையரிடம் அவர் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.