Published : 20 Mar 2015 09:09 AM
Last Updated : 20 Mar 2015 09:09 AM

ஒரு மாதத்துக்கு முன்பே ஒத்திகை பார்த்து விமானத்தில் கடத்திய 2.5 கிலோ தங்கம் சிக்கியது: விமான நிறுவன பஸ் பறிமுதல்; இளைஞர் கைது

இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சி இளை ஞரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு வில் இருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் விமானம் மதுரைக்கு வந்தது. ஓடுதளம் அருகே விமானத்திலிருந்து கீழே இறங்கிய பயணிகளை, தனி யார் விமான நிறுவன பேருந்து மூலம் டெர்மினலுக்கு அழைத்து வந்தனர். அப்போது அதிலிருந்த ஒரு பயணி, அமர்ந்திருந்த இருக் கைக்கு அடியில் ஏதோ பொருளை மறைக்க முயன்றதை சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது திருச்சி அண்ணாநகரைச் சேர்ந்த அனீபா மகன் முகமது பெரோஸ் கான் (26) என்பதும், இலங்கையி லிருந்து விமானத்தில் கடத்திவந்த தங்கத்தை பேருந்தின் இருக்கை யில் மறைத்து வைக்க முயற்சித்த தும் தெரியவந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் முகமது பெரோஸ்கானை கைது செய்து, தலா 500 கிராம் எடைகொண்ட 5 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்துவதற்கு தனியார் விமான நிறுவன ஊழியர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. எனவே அந்நிறுவன பேருந்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி விமானநிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கடத்தல். மதுரை, கொழும்பு விமான நிலையங்களில் சோதனை எவ்வாறு உள்ளது என்பதை அறி வதற்காக கடந்த ஒரு மாதத் துக்கு முன்பே முகமது பெரோஸ் கான் இதே வழித்தடத்தில் பயணம் செய்து ஒத்திகை பார்த்துள்ளார். அதன்பின் தற்போது கடத்தலில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டு விட்டார். இவருக்கு தனியார் விமான நிறுவன ஊழியர்களில் ஒருசிலர் உடந்தையாக இருப்ப தாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்களின் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம் பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அதில் சில பயணிகள் தங்களின் உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக்கான் என்பவரி டமிருந்து 200 கிராம் தங்கத்தையும், சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர் கொண்டு வந்த 200 கிராம் தங்கத்தையும், திருச்சி செந்தண் ணீர்புரத்தைச் சேர்ந்த விஜய லட்சுமி கொண்டுவந்த 250 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

3 பேரிடமும் பறிமுதல் செய்யப் பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.17 லட்சம் என சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x