

அனைவருக்கும் சுகாதாரம் என்பதை மனதில்கொண்டு, சுகாதார விழிப்புணர்வை அனைத்து மக்களிடமும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
டேக்-விஎச்எஸ் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் 4-வது ஆண்டுவிழா சென்னை மயிலாப் பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை யின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:
அனைவருக்கும் ஆரோக்கி யமான வாழ்வு கிடைக்க, முதலில் அனைவரும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பெற வேண்டும். இன்றைய வாழ்க்கைமுறைக் கேற்ப மக்களின் உணவுமுறையும் மாறியிருக்கிறது. அதனால், அனைவருக்கும் ஊட்டச் சத்துமிக்க உணவு கிடைப்ப தில்லை. கருவுற்ற தாய்மார் களுக்கு கூடுதல் ஊட்டச் சத்து தரவேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு தரத் தவறும்போது, ஆரோக்கிய குறைபாட்டுடன் எடை குறைவான குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கிறது. சுகாதாரக் கல்வி விழிப்புணர்வை பரவலாக கொண்டுசெல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சீனாவைச் சேர்ந்த சர்வதேச ஹீலர்.மாஸ்டர் ஹோங்சி சியா ‘ இ-டாவ் சுய சிகிச்சை முறை’ பற்றி விளக்கிக் கூறினார்.பாரதிய வித்யாபவன் சென்னை மையத் தலைவர் எல்.சபாரத்னம், டேக்-விஎச்எஸ் தலைவர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசுவாமி, புரவலர் டி.பார்த்தசாரதி, மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.எம்.ஹெக்டே, பாரதிய வித்யாபவன் சென்னை மைய இயக்குநர் கே.என்.ராமசுவாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.