54 மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு

54 மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு
Updated on
1 min read

இந்திய- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை முன்னிட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த சனிக்கிழமை இரவு தமிழக மீனவர்கள் 54 பேரை அவர் களது 10 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத் தனர்.

சென்னையில் இன்று இந்திய - இலங்கை மீனவர் களிடையே 3-வது கட்டப் பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதால் அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள 54 மீனவர் களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.

மீனவர்கள் இன்று (மார்ச் 24) மன்னார் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவர் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in