

சில்லறை நாணயங்கள் கொடுப்ப தாக ஜல்லி, கூழாங்கற்களை கொடுத்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் தலைமறைவானார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ், சென்னை வேளச்சேரியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி கடைக்கு தேவையான சில்ல றையை அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வாங்குவார். இதனால் வங்கி ஊழியர்களிடம் நெருங்கிய பழக்கம் வைத்துள்ளார். இதை நோட்டம் விட்ட ஒருவர், நேற்று முன்தினம் வங்கியின் மதிய உணவு இடைவேளையின்போது வங்கியில் இருந்து பேசுவதுபோல் செல்வராஜுக்கு போன் செய்து, 'ரூ. 24 ஆயிரத்துக்கு சில்லறை நாணயங்கள் இருப்பதாகவும் உடனே ஆட்களை அனுப்பி பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறி இருக்கிறார். அதை நம்பிய செல்வராஜ் கமிஷன் ரூ.1000-த்தையும் சேர்த்து ரூ.25 ஆயிரம் பணத்தை கடை ஊழியர் முருகனிடம் கொடுத்து வங்கிக்கு அனுப்பி வைத்தார்.
முருகன் சென்றபோது வங் கிக்கு வெளியே 2 சிறிய சணல் கோணிப்பையில் நாணயங்களை வைத்து கொண்டு ஒருநபர் நிற்க அவரிடம் முருகன் ரூ.25 ஆயி ரத்தை கொடுத்து 2 நாணய மூட்டைகளையும் பெற்றுக்கொண் டார். கடைக்கு கொண்டு வந்து அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது ஜல்லி, மார்பிள் துண்டுகள், கூழாங்கற்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வங்கிக்கு சென்று விசா ரித்த செல்வராஜ், நாங்கள் இன்று யாருக்கும் சில்லறை கொடுக்க வில்லை என்று கூறியுள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராஜ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.