

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மூவர் உட்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக சட்டசபையில், 20-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவதால், இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.