

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழ் அமைப்பினர் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு செல்ல தமிழ் அமைப்பினர் முயன்றனர். இதனால் போலீஸார் தமிழ் அமைப்பினரை கைது செய்தனர்.