

சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெரியமேடு பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி ரூ.1.30 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் திருட்டு சிடிக்களை பறிமுதல் செய்தனர்.
புதிய தமிழ் படங்கள் மற்றும் பழைய படங்களை திருட்டுத்தனமாக காப்பிரைட் உரிமமின்றி சென்னை பர்மா பஜார், ரட்டன் பஜார் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாகவும் அண்டை மாநிலங்களுக்கும் கடத்துவதற்காக, அதிகப்படியான சிடிக்கள் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெரியமேடு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு பகுதியில் உள்ள 2 கடைகளில் சோதனை செய்தனர். அப்போது காக்கிசட்டை, எனக்குள் ஒருவன் உள்ளிட்ட பல புதிய தமிழ் படங்கள், உரிமம் பெறாத பழைய தமிழ் படங்கள் மற்றும் ஆபாச படங்கள் என ரூ.1.30 கோடி மதிப்புள்ள 1.50 லட்சம் சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முகம்மது இஸ்மாயில் (35), முகம்மது சபருதீன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.