

தமிழக அரசின் வருவாயில் 50 சதவீதம் சமூக பாதுகாப்புக்கு செல வழிக்கப்படுவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனியில் நேற்று 104 ஜோடிகளுக்கு திரு மணம் நடத்தப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்து, திருமணங் களை நடத்தி வைத்த முதல்வர் பின்னர் பேசியது:
மும்மதத்தினரும் இங்கு மண மக்களாக உள்ளனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் இனிக்கும். இல்வாழ்க்கையானது பிறர் பழி சொல்லாமல் போற்றும் படி இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அதிமுக 24 ஆண்டுகள் ஆளும் கட்சியாக உள்ளது. மற்ற எந்த கட்சியும் அவ்வாறு இல்லை. தமிழக அரசின் வருவாயில் 50 சதவீதம் (ரூ.48 ஆயிரம் கோடி) சமூக பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது. குறிப்பாக கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு மாணவ, மாணவியருக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட விலை யில்லாப் பொருட்கள் வழங்கப்படு கின்றன. பொதுமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் வழங் கப்பட்டு வருகின்றன என்றார்.
விருந்து சாப்பிட்ட முதல்வர்
மணமக்களுடன் அமர்ந்து முதல்வரும் திருமண விருந்தை சாப்பிட்டார். அவருடன் அமைச் சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகி களும் கலந்துகொண்டனர். பின்னர் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, குத்துவிளக்குகள் என 67 வகையான சீர்வரிசை பொருட்க ளுடன், தாம்பூழ பைகளை முதல்வர் வழங்கினார்.