Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

கார்த்தி சிதம்பரம் போட்டியிட 32 தொகுதிகளில் 100 பேர் விருப்ப மனு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங் கிரஸாரிடம் 10-ம் தேதியி லிருந்து விருப்ப மனு வாங்கப் பட்டது. இதில் ஒரே நபரின் பெயரில் பலபேர் விருப்ப மனு கொடுத்தார்கள். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சீட் கேட்டு மதுரை, தேனி, கடலூர், வடசென்னை, சேலம் உள்ளிட்ட தொகுதிகள் நீங்கலாக பாக்கி 20 தொகுதிகளுக்கும் மனு கொடுத்திருக்கிறார்கள்.

சிதம்பரத்தின் மகன் கார்த்திக்காக ரிசர்வ் தொகுதி நீங்கலாக 32 தொகுதி களுக்கும் விருப்ப மனு கொடுத் திருக்கிறார்கள். கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, கடலூர், பெரும்புதூர், மயிலாடுதுறை, ஆரணி, திருவண்ணாமலை, திண் டுக்கல் தொகுதிகளில் கார்த்திக்காக அதிகபட்சமாக தலா 6 பேர் வரை மனு கொடுத்திருக்கிறார்கள். கார்த்திக்காக விருப்பமனு கொடுத்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே நூறை தாண்டிவிட்ட தாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதேபோல்

ஜி.கே.வாசனுக்காக மயிலாடு துறைக்கு 18 பேரும், ஜெயந்தி நடராஜனுக்காக ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு 13 பேரும், ஞான தேசிகனுக்காக திண்டுக்கல் தொகுதிக்கு 10 பேரும் மனு கொடுத்திருக்கிறார்கள்.

தனி தொகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. வள்ளல்பெருமானுக் காக 5 தொகுதிகளுக்கும் செல்வப்பெருந்தகைக்காக விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதிகளுக்கும் மனு கொடுத்திருக்கிறார்கள். சிதம்பரம் தனி தொகுதிக்கு தொழிலதிபர் மணிரத்தினமும் அவருக்காக அவரது ஆதரவாளர்கள் 65 பேரும் மனு கொடுத்திருக்கிறார்கள். வாழப்பாடியாரின் மகன் ராம.சுகந்தனுக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளுக்கும் தங்கபாலுவுக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், தென்சென்னை தொகுதிகளுக்கும் மனு கொடுத் திருக்கிறார்கள்.

இ.வி.கே.எஸ்-க்காக மத்திய சென்னை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கும் பிரபுவுக் காக கோவை, திருப்பூர் தொகுதிகளுக் கும் விஜய் இளஞ்செழியனுக்காக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளுக்கும் ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுத்திருக் கிறார்கள். சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்ம நாச்சியப்பன் தனக்காக மனு கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x