

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் திங்கள்கிழமை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 30 கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் திங்கள்கிழமை தனது ஆதரவாளர்களுடன் மல்லிப் பட்டினம் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிக் குள் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது, இந்திய சமூக ஜன நாயகக் கட்சியைச் (எஸ்டிபிஐ) சேர்ந்த இளைஞர்கள் சிலர், தங்கள் பகுதிக்குள் வாக்கு கேட்டு வரக் கூடாது என்று பாஜக-வினரைத் தடுத்தனராம். அதை மீறி பாஜக- வினர் சென்றபோது, இரு தரப்பி னரும் கல்வீச்சில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தில் கார்கள் உள் ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு கவிழ்க்கப்பட்டன. படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்தக் மோதல் தொடர்பாக பாஜக-வைச் சேர்ந்த மல்லிபட்டி னம் ராமர்கோயில் தெரு சுப்பிர மணியன், சின்னமணி, சத்திய சீலன், சித்திரவேல், மகாலிங்கம், தனபால் உள்ளிட்ட 9 பேரையும், எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த அதிராம்பட்டினம் பிஸ்மில்லா கான், ரஹ்மத்துல்லா, மல்லிபட்டி னத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான், சையதுஇப்ராகிம், முகம்மதுஹபிப் உள்ளிட்ட 21 பேரையும் சேதுபாவா சத்திரம் போலீஸார் கைது செய்து செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாஜக வேட்பாளர் முருகானந்தம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது மோதல் ஏற்பட்டது