

திருச்சி மாவட்டத்தில் திமுகவினரால் அதிமுகவினர் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் இறந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தாங் கிக் கொள்ள முடியாத திமுகவினர் அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டம் ஒன்றியம், குமாரவயலூரைச் சேர்ந்த நமச்சிவாயம், கிஷோர் குமார், ஆறுமுகம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில், நமசிவாயம் இறந்துவிட் டார். மற்ற இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த நமச்சிவாயம் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியாகவும், காயமடைந்த இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியாகவும் அதிமுக சார்பில் வழங்கப்படும். இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.