Published : 24 Feb 2015 09:01 AM
Last Updated : 24 Feb 2015 09:01 AM

கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளையில் போலீஸ் திணறல்: ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - மாறுபட்ட தகவல் பரவுவதால் குழப்பம்

கிருஷ்ணகிரி அருகே வேப்பனப் பள்ளி சாலையில் உள்ள ராமா புரம் கிராமத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் குந்தாரப்பள்ளி கிளை செயல்பட்டு வருகிறது. பழையக் கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த வங்கியின் பின்புறம் உள்ள காலி நிலத்தின் வழியாக, கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை கொள்ளையர்கள் வங்கியின் உள்ளே புகுந்தனர். வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, பாதுகாப்பு பெட்டகத்தை நவீன வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி விட்டு ரூ.12 கோடி மதிப்புள்ள 6,033 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாள் தலை மையில் அமைக்கப்பட்ட 10 தனிப்படை போலீஸார் வட மாநிலங்களில் முகாமிட்டு கொள் ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஜார்கண்ட் கொள்ளையன்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜார்கண்ட் மாநிலத்துக்குச் சென்ற தனிப்படை போலீஸார் மிதுன்மண்டேல்(29) என்பவரைப் பிடித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளி அருகே பாலதொட்டனப்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் மிதுன்மண்டேலுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி போலீ ஸார் அவரை கைது செய்துள்ள தாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளை சம்பவம் நடந்து இன் றுடன் ஒரு மாதம் கடந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களிடம் விசாரித்தும் துப்பு கிடைக் காததால் போலீஸார் திணறி வருகின்றனர்.

கண்ணீருடன் வாடிக்கையாளர்கள்

இதனிடையே நகைகளை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் தினமும் வங்கிக்குச் சென்று தங்களது நகையின் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். வழக்கின் நிலை என்ன என்பது தெரியாததால் வாடிக்கையாளர்களுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க குற்ற வாளிகளை கைது செய்து, நகை களை போலீஸார் மீட்டதாக வும் வாடிக்கையாளர்களிடையே தகவல் பரவி வருகிறது. இது குறித்து அவர்கள் வங்கி அதிகாரி களிடம் கேட்கின்றனர். இதற்கு பதில் கூற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, ‘வங்கிக் கொள்ளை தொடர்பாக இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளை போன நகைகளும் பறிமுதல் செய்யப்பட வில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x