Published : 22 Feb 2015 01:14 PM
Last Updated : 22 Feb 2015 01:14 PM

கிருஷ்ணகிரி அருகே வங்கியில் கொள்ளை போன நகைகள் கிடைக்குமா? - அடகுவைத்த வாடிக்கையாளர்கள் கவலை

கிருஷ்ணகிரி அருகே வங்கியில் நடந்த நகை கொள்ளை சம்பவத் துக்குப் பிறகு, 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து விசார ணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நகைகள் திரும்ப கிடைக்குமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் பாங்க் ஆப் பரோடா குந்தாரப்பள்ளி கிளையில் கடந்த ஜனவரி மாதம் 24 -ம் தேதி, பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து 6033 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதில் சுமார் 950-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நகை கொள்ளை போனது.

இந்த வங்கியில் பெரும்பாலும் விவசாயிகளும், கூலி வேலை செய்பவர்கள்தான் நகையை அடகு வைத்துள்ளனர். கொள்ளை போன எங்கள் நகைகளுக்கு உரிய தொகை கிடைக்குமா? என்கிற குழப்பத்தில் கடந்த ஒரு மாதமாக நகை இழந்த வாடிக்கையாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

‘‘பொதுத்துறை வங்கி என்பதால்தான் நம்பிக்கையுடன், பாதுகாப்பு கருதி நகைகளை அடகு வைத்தோம். எங்கள் நகைகளுக்கு வங்கிதான் முழு பொறுப்பு. கூலி வேலை செய்து, சிறு சேமிப்பு மூலம் நகை வாங்கி அவசரத்துக்காக நகையை அடகு வைத்தேன். தற்போது நகை திரும்ப கிடைப்பது குறித்து முழு தகவல்கள் இல்லை. கண்டிப்பாக நகை வழங்கப்படும் என வங்கியில் கூறினாலும், நகைக்கான முழு தொகை கிடைக்குமா, காப்பீடு நிறுவனம் வழங்கும் தொகை மட்டும்

கணக்கீட்டு, கடன் தொகை பிடித்து கொண்டு எவ்வளவு வழங்குவார் கள் என தெரியவில்லை’’ என்கிறார் வாடிக்கையாளர் விஜயராணி. வீடு கட்டுவதற்காக உறவினர் ஒருவரின் நகையை வங்கியில் குறைந்த பணத்துக்கு வைத்தேன். தற்போது நகை கொடுத்தவர்கள் திரும்பி கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். கொள்ளை போன நகைக்கு வங்கி நிர்வாகம் எவ்வ ளவு தரும் என்பது தெரியவில்லை.

23 நாட்கள் தூக்கம் இழந்து நகை கிடைக்குமா என்கிற வேதனையில் உள்ளேன்’’ என கண்ணீருடன் கூறுகிறார் சுவாலா (45). மேலும், சிலர் கூறும்போது நகை முழுமையாக திரும்பக் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் வாடிக்கையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வங்கி அதிகாரிகள் கூறும்போது, நகை கொள்ளையில் போலீஸார் குற்றவாளிகளை கைது செய்து, நகையை மீட்டுத் தருவார்கள் என்கிற மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளோம். காப்பீடு தொகை பெற வேண்டும் என்றால் போலீஸார் அறிக்கை தர வேண்டும். அதனைத் தொடர்ந்துதான் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x