திருமுல்லைவாயிலில் உரிமம் பெறாத துப்பாக்கியுடன் சுற்றிய இரு இளைஞர்கள் கைது

திருமுல்லைவாயிலில் உரிமம் பெறாத துப்பாக்கியுடன் சுற்றிய இரு இளைஞர்கள் கைது
Updated on
1 min read

திருமுல்லைவாயிலில் துப்பாக்கி யுடன் சுற்றிய இரண்டு இளைஞர் கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலை அடுத்த அண்ணனூர் திருக்குறள் பிரதான சாலையில் வசித்து வந்தவர், திருநெல்வேலியை சேர்ந்த சிம்சன் ராஜா((36), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(34). ராஜாவின் தந்தை, சென்னை மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

சிம்சன் ராஜா, ராஜா ஆகிய இருவரும் சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, திருமுல்லைவாயில் சி.டி.எச்., சாலை பகுதியில் திருமுல்லை வாயில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சுற்றிய சிம்சன் ராஜா, ராஜா ஆகிய இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் போலீஸார். அச்சோதனையில், சிம்சன், ராஜா ஆகிய இருவரிடமும், உரிமம் பெறாத கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சி யடைந்த திருமுல்லைவாயில் போலீஸார், இருவரிடமிருந்து, துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பிறகு, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிம்சன், ராஜா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in