

இயேசு அழைக்கிறார் அமைப்பு நடத்திய தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில்10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.
இயேசு அழைக்கிறார் அமைப் பின் சார்பில் “10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை” சென்னை சேத்துப் பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத் தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சிறப்பு கூட்டுப் பிரார்த் தனையில் பங்கேற்றனர்.
இவர்களைத் தவிர கல்லூரி களில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வு மற்றும் அரசு வேலைக்கு தேர்வு எழுதுபவர்களும் பிரார்த் தனையில் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மனோகர் வரவேற்புரையாற்றினார். கத்தோலிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை விக்டர் ரமேஷ், பிரார்த்தனை செய்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும், காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரு மான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளை இறை நம்பிக்கையோடு எழுதினால், உயர் வெற்றி பெறலாம் என உரையாற்றினார். அதன்பின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளை கூட்டுப் பிரார்த்தனையில் வழி நடத்தினார். இறுதியில் மாணவ, மாணவிகளுக்காக பால் தினகரன் பிரார்த்தனை செய்தார்.
சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாணவ, மாணவிகள். (உள்படம்)கூட்டத்தில் உரையாற்றுகிறார் பால் தினகரன்.